விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாப்போம்... உலக தேனீக்கள் தினம் இன்று !

சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு தேனீக்கள். இவற்றிடம் இருந்து உழைப்பை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவை பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக உள்ளன. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இவை இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும்.

தேன் முக்கிய உணவு. மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது.

தேனீ வளர்ப்பை ஊக்குவித்தால், அது தேன் சேகரிப்புக்கு மட்டுமின்றி, அயல் மகரந்தச் சேர்க்கையினால் விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும்.

'இயற்கையால் ஈர்க்கப்பட்ட தேனீ நம் அனைவரையும் வளர்க்கிறது' என்பது இந்தாண்டின் 'தீம்' ஆகவுள்ளது.

இதன்படி, சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு போன்ற பலவற்றில் தேனீக்கள், பிற மகரந்தச் சேர்க்கையாளர்களின் பங்கு குறித்து வலியுறுத்தப்படுகிறது.