உயிர்களை காப்போம்... உலக ரத்த தான தினம் இன்று !
ரத்த தானம் அளிப்பதால் விபத்து, ஆப்பரேஷன் உள்ளிட்ட சூழலில் பாதிக்கப்படுபவர் காப்பாற்றப்படுகின்றனர்.
ரத்த தான அவசியத்தை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் இன்று (ஜூன் 14ல்) உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'ரத்தம் வழங்கு, நம்பிக்கை கொடு: நாம் இணைந்து உயிர்களை காப்போம்' என்பது இந்தாண்டின் மையகருத்து.
18 - 65 வயதுடையவர் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 45 கிலோ இருக்க வேண்டும்.
ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனை செய்த பின் ரத்த தானம் வழங்கலாம். 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது.
ரத்த வகைகளை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கார்ல் லாண்ட் ஸ்டெய்னர் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இது அமைந்துள்ளது.
ரத்ததானம் செய்வது, இதயநோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.