புவியின் நுரையீரலை காப்போம் : இன்று உலக வன தினம்

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 21ம் தேதி உலக வன தினம் கொண்டாடப்படுகிறது

பூமியை பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக முக்கியமானது.

காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும்.

ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மரமானது தன் சராசரி ஐம்பது வருட வாழ்நாளில் ஆறாயிரம் பவுண்ட் ஆக்சிஜனை வெளியிடுகிறதாம்.

இதில் வெப்பமண்டல காடுகள் மட்டும் மனிதன் மட்டுமின்றி கிட்டத்தட்ட பூமியின் 50 சதவீதம் உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளது.

பருவமழையின் அளவை அதிகரித்தல், மண் வளம் காத்தல், மண் அரிப்பு, நிலச்சரிவு, வெள்ள ஆபத்துகளை தடுத்தல் என காடுகளின் பயன்கள் மிகவும் ஏராளம்.

உலகமே சந்திக்கும் முக்கிய பிரச்னையான பருவநிலை மாற்றதிற்கு காடுகள் அழிவதும் தான் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதனால் வனங்களை பாதுக்காப்போம்!