மார்கழி காற்று உடலுக்கு நல்லது!! கோலம் போடலாமே...
மார்கழி மாதத்தில், ஓசோன் படலத்தில் இருந்து, ஆக்ஸிஜன் அதிகளவில் வெளிப்படுகிறது. அதை சுவாசிப்பது நுரையீரலுக்கு நல்லது.
காலையில் விழிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சி தரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சமயத்தில், அதிக குளிரால், காளான் தொற்று, வைரஸ், பாக்டீரியா கிருமிகளால், எளிதில் நோய் பரவும் அபாயமுள்ளது.
இதை தடுக்க, சாணம் தெளிப்பதும், வீட்டை சுத்தப்படுத்துவதும் காலம் காலமாக இங்கு செய்யப்படுகிறது. இதில் அனைவரையும் கவரும் விஷயம் கோலம் போடுவதாகும்.
அதுவரை, கோலம் போடத் தெரியாதவர்கள் கூட, தட்டுத்தடுமாறி, புள்ளி வைத்து வண்ணக் கோலமிட விரும்புவர். குனிந்து கோலம் போடுவதால், உடலில் உள்ள நரம்புகள் வலுவடையும்.
இந்த கோலத்தை, பச்சரிசி மாவால் இட்டு போடும் பட்சத்தில், எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவு கிடைக்கும் என நம் முன்னோர்கள் நம்பினர்.