இன்று உலக தொலைத் தொடர்பு தினம்!
1969 மே 17ல் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் மார்ச் 2006ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) மூலம் மே 17 ஆம் தேதி உலக தகவல் சமூக தினமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதன் முக்கிய குறிக்கோள் இன்டர்நெட், அலைபேசி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், நல்லவிதமாகவும் பயன்படுத்துவது தான்.
டிஜிட்டல் கூட்டணியின் மூலம், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் டிஜிட்டல் மாற்றம், உலகளாவிய இணைப்பிற்கு உறுதியளிக்குமாறு தனியார் மற்றும் பொதுத் துறைகளை வலியுறுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான மையக்கருத்து "டிஜிட்டல் லைஃப்லைன்கள்: இணைக்கப்பட்ட உலகில் பின்னடைவை வலுப்படுத்துதல்" ஆகும்.
டிஜிட்டல் யுகத்தில் கேஜெட்கள் இல்லாத ஒரு நாளை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது.மக்களை நண்பர்கள், குடும்பத்தினருடன் இணைக்க தொலைத்தொடர்பு தான் முக்கிய வழி.
உலகின் பல பகுதிகள் இணைப்பு தொடர்பான சவால்களை, சமாளிக்க திறமையான தொலைத்தொடர்பு வலையமைப்பு என்பது தகவல் சமூகம் கட்டமைக்கப்பட்ட அடித்தளமாகும்.