ஒரு டீ போடுங்க.. இன்று சர்வதேச தேநீர் தினம்!
உலகில் தண்ணீருக்கு அடுத்து பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் 'டீ' உள்ளது.
தேயிலையின் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 21ல் சர்வதேச தேநீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தேயிலை உற்பத்தியில் சீனா, இந்தியா முதலிரண்டு இடங்களில் உள்ளது. தேயிலையில்தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.
சர்வதேச தேநீர் தினம் நிலையான தேயிலை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேநீர் அருந்துவது மூளையை சுறுசுறுப்படையச் செய்வதுடன், இதில் உள்ள catechin என்னும் வேதிப்பொருள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவிகிறது
க்ரீன் டீ மற்றும் ப்ளாக் டீ அருந்துவதால் மருத்துவரீதியாக பல நன்மைகள் கிடைக்கின்றன.
பால் இல்லாமல் தேநீர் குடிக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பும் டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.