இன்று உலக தொழிலாளர் தினம் 
        
 சர்வதேச உழைப்பாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. 
        
உலகின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உலக தொழிலாளர் அமைப்பு சார்பில்  இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.  
        
தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 
        
 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12 - 18 மணி நேரம் கட்டாய வேலை என இருந்தது.  
        
இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.  
        
 ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் தொழிலாளர்களின் முயற்சிகள் எல்லையற்றவை.  
தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்காமல் கொள்ளையடிக்கப்பட்ட பல சம்பவங்கள் 
நடந்துள்ளன 
        
தொழிலாளர் இயக்கங்களின் சாதனைகளைப் போற்றும் வகையில், மே 1 அன்று உலகம் தழுவிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.