மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
25,590 இளங்கலை மாணவர்கள், 5,337 முதுகலை மாணவர்களிடம், மனஅழுத்தம் உள்ளதா என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்தியுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் 25 சதவீத இளங்கலை மருத்துவ மாணவர்களும் (யு.ஜி.,), 15 சதவீத முதுகலை மருத்துவ மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் 16.2 சதவீத மருத்துவ மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
குறிப்பாக, 5,337 முதுகலை மாணவர்களில் 10 சதவீதத்திற்கு அதிமான மாணவர்கள் தற்கொலை முயற்சிகளுக்கு திட்டமிட்டுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.
25 சதவீத இளங்கலை மருத்துவ மாணவர்களும் (யு.ஜி.,), 15 சதவீத முதுகலை மருத்துவ மாணவர்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர்கள் வாரத்திற்கு 74 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் தினசரி எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
தனியாக மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களால் மன அழுத்தத்தில் உள்ளாகியுள்ளனர்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் பணி நேரத்தில் ஆசிரியர்கள் பணியில் இல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
முதுகலை மாணவர்களுக்கு விடுதி வசதிகள் திருப்தி அளிக்கவில்லை. இதில் 50 சதவீதம் பேர் ஏழைகள். இவ்வாறு அவர்களின் மன அழுத்ததிற்கான காரணங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.