ஜனவரியில் களைகட்டவிருக்கும் ஹம்பி திருவிழா!
ஹம்பியில், கொண்டாடப்படும் இந்த விழாவானது அந்த மக்களின் பாரம்பரியத்தையும் விஜய நகர பேரரசின் பெருமைகளையும் எடுத்துரைக்கிறது.
பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இந்த விழாவானது, 2023 ஜனவரி 27 முதல் 29 வரை நடைபெற வண்ணமயமாக உள்ளது.
ஹம்பி திருவிழாவில் நாட்டுப்புற நடனங்கள், பாடல்கள், பொம்மலாட்டங்கள், ஜம்பு சவாரி, யானை சவாரி, போன்றவை விமரிசையாக நடைபெறும்.
நீங்கள் புது வகை உணவுகளை விரும்புபவர் என்றால், கர்நாடகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்க இதுவே உகந்த தருணமாகும்.
இங்கு கலைஞர்களால் தயாரிக்கப்படும் எழில்மிகு கைவினைப் பொருட்கள், விழாவின்போது காட்சிப்படுத்தப்படுகின்றன.
சாகச விளையாட்டுகளான மலை ஏறுதல், கிராமப்புற விளையாட்டுகள் போன்றவை கோலாகலமாக நடைபெறவிருக்கின்றன.
இங்கு நடக்கும் வர்ணஜால வேடிக்கைகள் போன்ற பல நிகழ்ச்சிகள் தனித்துவமான ஈர்ப்பை உடையதாகும்.
ஒவ்வொரு மாநிலத்தின் கலை, உணவு வகைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆய்வு செய்பவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு பெரும் வாய்ப்பாகும்.
துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஹம்பி, பெங்களூரு நகரத்திலிருந்து 373 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.