மைக்ரோ கிரீன்ஸ்... முக்கியத்துவம் அறிவோமா?

மைக்ரோகிரீன்ஸ் என்பது காய்கறி, தானிய வகைகளின் இளம் நாற்றுகளை 7 முதல் 14 நாட்களுக்குள் அறுவடை செய்து பயன்படுத்தும் நவீன சாகுபடி முறையாகும்.

இதனால், சிறிய டிரேக்களில் வைத்து வீட்டிலேயே வளர்க்கலாம். இல்லாவிட்டால், மிகக் குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டுடன் நவீன விவசாயம் போல உற்பத்தி செய்யலாம்.

சாதாரண காய்கறிகளை விட மைக்ரோ கிரீன்ஸ் பல மடங்கு அதிகமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில், சூரியகாந்தி, பச்சைப்பயறு, வெந்தயம், கடுகு, பட்டாணி, முள்ளங்கி, ப்ரோக்கோலி, கோதுமைப்புல் போன்றவை அதிகம் பயிரிடப்படும் வகைகள்.

ஆண்டு முழுவதும் உற்பத்தி, அதிக ஊட்டச்சத்து மதிப்பு, உணவுச் சந்தையில் அதிக தேவை, ஆரோக்கியம் ஆகியவையே மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பதற்கான காரணம்.

சூரியகாந்தி, ப்ரோக்கோலி, பட்டாணி, கோதுமைப்புல், கேரட், பட்டாணி, பீட்ரூட், பச்சைப்பயறு, கருப்பு கொண்டைக்கடலை, வெந்தயம், கடுகு, முள்ளங்கி ஆகியவற்றை இம்முறையில் வீட்டிலேயே வளர்க்கலாம்.

அதேவேளையில், வணிகப் பயன்பாட்டிற்காகவும் உற்பத்தி செய்து, விற்பனை வாயிலாக லாபம் பெறலாம் என்பது விவசாயிகளின் அட்வைஸாகும்.

மைக்ரோ கிரீன்ஸ் ஆரோக்கிய உணவே தவிர எந்த நோயையும் குணப்படுத்தும் மருந்தல்ல. மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது.