இன்று இந்திய விமானப் படை தினம்

இந்தியாவின் வான் பகுதியை பாதுகாப்பதில் விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது. 1932 அக்.8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.8ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய விமானப்படை (IAF) அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய விமானப்படையாகும்.

சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர், சமீபத்திய 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது.

போர் தவிர இயற்கை பேரழிவுகளின் போது, மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது.

ஐ.நா.,வின் அமைதிப்படையிலும் இடம் பெற்றுள்ளது. இந்திய விமானப்படையில் 2229 போர் விமானங்கள் உள்ளன.

அக்டோபர் 8 அன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இது மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.