30க்கு மேல் பக்கவாத பரிசோதனை... நடிகர் அஜித்தை பின்பற்றலாமே!
50 வயதை கடந்த நடிகர் அஜித், அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வழக்கமுடையவர்.
சமீபத்தில் அவர் மேற்கொண்ட பரிசோதனையில், காது - மூளை இடையே, நரம்பில் சிறிய வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.
அது, நாளடைவில் பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்ததால், சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு, தன் வழக்கமான பணிகளில் நடிகர் அஜித் ஈடுபட்டுள்ளார்.
எனவே, அஜித்தை பின்பற்றி, 30 வயதுக்கு மேற்பட்டோர் அவ்வபோது உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, பொது சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவற்றால் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, 30 வயதை கடந்தவர்கள், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம், இதயம், புற்று நோய் உள்ளிட்ட நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், முழுமையாக குணப்படுத்த முடியும்.