அலர்ஜியும் சைனசும் ஒன்றா? வித்தியாசம் அறிவோமா...

அலர்ஜி என்பது மரபணு உட்பட பல்வேறு காரணங்களால் ரத்தத்தில் வருகிறது. சைனஸ், அலர்ஜியை டாக்டர் தான் வேறுபடுத்தி கண்டுபிடிக்க முடியும்.

நீங்களாகவே சுயசிகிச்சை எடுக்கக்கூடாது. சைனஸ் என்பது நாள்பட்ட நோய். மூக்கு அடைபட்டு சதை வீங்கி, எலும்பு வளைந்து சளி முற்றி வருவது சைனஸ்.

மூக்கு, தொண்டையில் சளி சேர பழுத்து சைனஸில் கொண்டு விடும். மூக்கின் இரு துவாரங்களும் சரியாக இருந்தால் வெளியில் இருந்து வரும் கிருமிகள் தடுக்கப்பட்டு தொண்டைக்கு சுத்தமான காற்று செல்லும்.

மூக்கில் தண்டு வளைந்திருந்தாலோ, சளி மூலம் அடைத்திருந்தாலோ காற்றின் மூலம் வரும் கிருமிகள் அங்கு குடிகொள்ளும். துாசியும் சேரும் போது கெட்ட நீராக மாறி சளியாகி சைனஸ் ஆகிவிடும்.

ஜலதோஷம் வந்தால் தைலம் தடவுவதோ சொட்டு மருந்து விடுவதோ சுயமாக செய்யக்கூடாது. இதனால் மூக்கில் உள்ள சதையில் அரிப்பு ஏற்பட்டு நாளடைவில் மூக்கின் சுத்திகரிக்கும் தன்மை குறையும்.

மேலும் நாம் சுவாசிக்கும் மோசமான காற்று நுரையீரலுக்குச் சென்றுவிடும். இதனால் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்துவிடும்.

சைனஸ் பிரச்னை ஒருமுறை வந்து விட்டால், வாழ்நாள் முழுதும் இருக்கும் என்பதெல்லாம் தவறான அபிப்ராயம். காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்தால், நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.