ஆரோக்கியம் தரும் முடக்கத்தான் தோசை!
தேவையானப் பொருட்கள்: தோசை மாவு - ஒரு கப், முடக்கத்தான் இலை - 2 கைப்பிடி அளவு, உளுத்தம் பருப்பு - 1 டேபிஸ் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 25, இஞ்சி - 2 துண்டு.
பூண்டு - 15 பல், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வரமிளகாய் - 8, தேங்காய் - 2 துண்டு, புளி - 15 கிராம், கல் உப்பு, நல்லெண்ணெய் - தேவையானளவு.
கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க விடவும். வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துண்டுகளுடன் புளியை சேர்த்து வதக்கவும். பின், கொத்தமல்லி தழை, முடக்கத்தான் இலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இவை நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து, மாவில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலக்கவும்.
ஸ்டவ்வில், தோசைக்கல் வைத்து சூடானதும், மாவை ஊற்றி சற்று மெல்லியதாக தேய்க்கவும்.
மிதமான தணலில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுவென சுட்டெடுத்தால், சுவையான, ஆரோக்கியமான, முடக்கத்தான் தோசை இப்போது ரெடி.