இன்று தேசிய மருத்துவர்கள் தினம்!

இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும்.

மேலும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகங்களுக்கு மருத்துவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்க ஆண்டு தோறும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.

1882ல் ஜூலை 1 அன்று பிறந்த டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. இவரின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் உட்பட பல மதிப்புமிக்க மருத்துவ நிறுவனங்களை நிறுவுவதில் டாக்டர் ராய் முக்கிய பங்கு வகித்தார்.

2024 ஆம் ஆண்டு தேசிய மருத்துவர் தினத்தின் கருப்பொருள் "குணப்படுத்தும் கைகள், அக்கறையுள்ள இதயங்கள்" என்பதாகும்.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மருத்துவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.