பயத்தை வெல்பவன் யார்...? நெல்சன் மண்டேலாவின் தன்னம்பிக்கை வரிகள்

துணிச்சலான மனிதன் என்பவன் பயப்படாதவன் அல்ல, அந்த பயத்தை வெல்பவன்.

உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.

என் வெற்றிகளை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள், நான் எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.

செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும்.

ஒரு மனிதனுடன் அவரால் புரிந்துக்கொள்ளும் மொழியில் பேசினால், அது அவருடைய தலைக்குச் செல்லும். அவருடைய மொழியில் பேசினால், அது அவரின் இதயத்துக்கு செல்லும்.

மனக்கசப்பு என்பது விஷம் குடித்துவிட்டு, அது உங்கள் எதிரிகளைக் கொல்லும் என்று நம்புவது போன்றது.

ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளைத் தாண்டி உயர்ந்து, தாங்கள் செய்யும் செயல்களில் அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் இருந்தால் வெற்றியை அடைய முடியும்.

பின்னால் இருந்து வழிநடத்துங்கள்; மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.

பணம் வெற்றியை உருவாக்காது, அதை உருவாக்கும் சுதந்திரம் வெற்றியை உருவாக்கும்.