நேபாள ஸ்பெஷல்... சுக்கவுனி !

தேவையானப் பொருட்கள்: உருளை கிழங்கு - 2, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, சீரக துாள், காஷ்மீரி மிளகாய் துாள், l கருப்பு உப்பு - தலா 1 டீஸ்பூன்.

தயிர் - 0.5 லிட்டர், சாதாரண உப்பு - 0.25 டீஸ்பூன், கொத்தமல்லி இழை, கசூரி மேத்தி - சிறிதளவு, கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் துாள், மிளகாய் துாள் - தலா 0.25 டீஸ்பூன்.

ஒரு பாத்திரத்தில் கெட்டித்தயிரை ஊற்றி, கட்டியில்லாமல் நன்கு அடிக்கவும்.

இதனுடன் தோல் சீவி, வேக வைத்த உருளை கிழங்கை துண்டு, துண்டாக நறுக்கி சேர்க்கவும்.

பின், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரக துாள், காஷ்மீரி மிளகாய் துாள், உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.

பின் அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு சேர்த்து தாளித்து, கசூரி மேத்தி, மஞ்சள், மிளகாய் துாள்களை சேர்த்து லேசாக கிளறவும்.

இந்த சூடான தாளிப்பை ஏற்கனவே தயார் செய்துள்ள, உருளை கிழங்கு - தயிர் கலவையில் ஊற்றி, நன்கு கிளறினால் சுவையான நேபாளி சுக்கவுனி தயார்.

இதை உடனடியாகவோ அல்லது சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து, 'ஜில்'லென்றும் சாப்பிடலாம்.