யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு புதுக்கட்டணம்...

யுபிஐ வாயிலாக நடக்கும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகள் இதோ...

தனி நபர்களுக்கு இடையே எவ்வளவு பணப்பரிமாற்றம் நிகழ்ந்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

சிறிய வணிகர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கும் எந்த கட்டணமும் இல்லை. இலவசமாகவே தொடரும்.

வணிகர்களுக்கு நடக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணப்பரிவர்த்தனைகளுக்கே கட்டணம் பொருந்தும்.

இந்த கட்டணம் என்பது அரசோ அல்லது யுபிஐ செயல்படுத்தும் என்பிசிஐ விதிக்கும் வரி கிடையாது.

கியூஆர் கோடு வாயிலாக மாதம் ரூ.1 லட்சம் வரையில் பெறும், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட சாலையோர வர்த்தகர்களுக்கும் எந்த கட்டணமும் இல்லை.

தனிநபர்களிடம் இருந்து வர்த்தகர்களுக்கு இடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடக்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதில் கிடைக்கும் கட்டணம், யுபிஐ சேவையில் உள்ள வங்கிகள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு வழங்கப்படும்.

75 ஆயிரம் ரூபாய்க்கு அல்லது அதற்கு மேல், நடக்கும் பரிமாற்றங்களுக்கு அதிகபட்சமாக 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ரயில்வே, தொலைதொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய உற்பத்தி துறையில் நடக்கும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

மியூச்சல் பண்ட், பங்குச்சந்தை புரோக்கர்கள் மற்றும் டீலர்களுக்கு 0.02 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சம் 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.