இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிமுறைகள்

புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வரி விகிதங்களில் மாற்றம் இல்லை, ஆனால் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்...

1961ம் ஆண்டு முதல் நடை முறையில் இருந்த பழைய வருமான வரி சட்டம் நீக்கப்பட்டு, எளிமையான 'வருமான வரி சட்டம் 2025' இன்று முதல் அமலாகிறது.

இதன்படி, இனி 'முந்தைய ஆண்டு', 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற குழப்பங்கள் இருக்காது. அனைத்தும் ஒரே 'வரி ஆண்டு' என அழைக்கப்படும்

'குழந்தைகள் கல்வி படி' இதுவரை ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாயாக இருந்தது. இனி 3,000 ரூபாயாக உயர்வு

அலுவலகம் வழங்கும் ஒரு வேளை உணவிற்கான வரி விலக்கு வரம்பு 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்வு.

வீட்டு வாடகைப்படி மீதான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வங்கியில் டிபாசிட் செய்ய/ எடுக்க பான் கார்டு கட்டாயம்.

ரூ.5 லட்சத்துக்கும் மேல் வாகனம் வாங்க, ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஹோட்டல்/ஈவென்ட் செலவுக்கு மற்றும் ரூ.20 லட்சத்துக்கும் மேல் சொத்து பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு பான் கார்டு கட்டாயம்

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியான சி.பி.டி.சி., அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்ற முறையாக சேர்ப்பு

வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கான டி.சி.எஸ். வரி, 20 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் மருத்துவத்துக்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போதும், வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.