நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலை சாறு குடிங்க!

டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், முன்தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலை சாறு அருந்தலாம் - சித்தா டாக்டர்கள்

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகளால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காய்ச்சல் வரும் முன் கூட, நிலவேம்பு கஷாயம் அருந்தலாம்.

பெரியவர்கள் ஐந்து நாட்கள் வரை காலை, மாலையில், 30 - 50 மில்லி வரை; குழந்தைகள் 10 - 20 மில்லி, நிலவேம்பு குடிநீர் அருந்தலாம்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், 10 மில்லி பப்பாளி இலை சாறு அருந்தலாம். சிறியவர்களுக்கு, 1 முதல் 5 மில்லி போதும்.

இவற்றில் வெல்லம், சர்க்கரை போன்றவற்றை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; கர்ப்பிணியர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

அலோபதி மருந்து எடுத்து கொள்பவர்கள், சித்தா டாக்டரின் ஆலோசனைப்படி தான், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைசாறு அருந்த வேண்டும்.

காய்ச்சலுக்கு பின், சுயமாகவும், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.