பற்களில் மஞ்சள் கறையா? நீக்க சில டிப்ஸ்…

பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை காரணங்களாக கூறலாம்.

இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பற்களை அடிக்கடி பிளீச்சிங் செய்து வெண்மையாக்கி கொள்கிறார்கள்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளன.

பற்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும்.

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதில் உள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது.

இரவு உறங்கும் முன், ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். சில நாட்களில் நல்ல மாற்றம் வரும்.

தினமும் இரண்டு முறையாவது துலக்குவதை வழக்கமாக கொள்ளுங்கள். குறைந்தது 2 முதல் 3 நிமிடங்களில் பற்களை துலக்கலாம்.