நிம்பஸ் வகை கொரோனா பரவல்! என்ன பாதிப்பு தரும்?
தொண்டையை பிளேடால் கிழித்து புண்ணாக்குவது போன்ற வலியை ஏற்படுத்தும், 'நிம்பஸ்' என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பரவத் துவங்கியுள்ளது.
கடந்த, 2019ல் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே உலுக்கியது.
சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த தொற்று பரவல், புதுப்புது வடிவங்களில் உருமாறி, தற்போது மீண்டும் பரவி வருகிறது.
கலிபோர்னியா, நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட குறைந்தது, 13 அமெரிக்க மாகாணங்களில் நிம்பஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஆசியாவின் சில பகுதிகளில், குறிப்பாக சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியாவிலும் கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன.
இந்தியாவில், கொரோனா இறப்பு, 100ஐ தாண்டிஉள்ளது. ஆனால், 'நிம்பஸ்' வகை தொற்று இதுவரை இங்கு கண்டறியப்படவில்லை.
இந்த வகை வைரஸ் உயிரைக் கொல்லும் அபாயத்தை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருமல், காய்ச்சல், சோர்வு, தசை வலி, குமட்டல், வாசனை அல்லது சுவை இழப்பு போன்ற கொரோனா பாதிப்புக்கான அறிகுறியே நிம்பஸ் வகை வைரஸ் பாதிப்புக்கும் உள்ளது.