இன்று அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினம்!

நமது சமூகத்தின் முன்னேற்றம், அமைதியில் அறிவியலின் பங்கு மிகவும் முக்கியமானது.

இது, பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ சார்பில் நவ. 10ல் உலக அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'நம்பிக்கை, மாற்றம் & நாளை : 2050க்கு தேவையான அறிவியல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

அறிவியலின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும்.

மேலும், அறிவியல் தொடர்பான விவாதங்கள் மற்றும் செயல்பாடுகளில் மக்களை ஈடுபடுத்துவதை இந்த நாளின் நோக்கம்.

அறிவியல் - சமூகத்துக்கு இடையே தொடர்பை அதிகரிப்பதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.