இன்று உலக குழந்தைகள் தினம்!

உலக நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன. இருந்தாலும் சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவ., 20ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது

1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு குறித்து சர்வதேச மாநாடு நடந்தது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள், கல்வி உறுதி குறித்து உலக நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து 1989-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான மாநாடு நடத்தப்பட்ட நாளான நவம்பர் 20-ந்தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா., சபை ஏற்றுக்கொண்டது.

குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் அவர்களை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் அவர்களோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களது எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.