இன்று கிருபானந்த வாரியார் நினைவு தினம்

அடக்கமாகவும் பணிவாகவும் இரு. பணிவு ஒன்றே உன் வாழ்வை உயர்த்தும்.

யாரையும் சிறியவன் என்று ஏளனம் செய்யாதே.

இன்பமும், துன்பமும் உனது மனதில் இருந்தே தோன்றுகின்றன.

மரணம் எப்போது வரும் என அறிய முடியாது. எனவே அதற்குள் புண்ணியத்தை தேடு.

நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிட்டால் உடல் நலம் குறையும்.

மழைநீர் சேரும் இடத்திற்கேற்ப நிறம் மாறுவது போல, மனிதன் சேரும் நண்பனைப் பொறுத்து குணம் மாறுகிறான்.

மனிதனையும், விலங்கையும் பிரிக்கும் மைல் கல் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ஒழுக்கம்.

எளிமையாக வாழ்ந்தால் மன நிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.