கிள்ள கிள்ள அள்ளித்தரும் கீரைகளை வளர்க்க ஒதோ சில டிப்ஸ்

கீரை செடிகளை வளர்க்க ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை; அளவாக இருந்தாலே அறுவடை செய்யலாம். முறையாக பராமரித்தால் போதும்.

விதையில் முளைக்கும் கீரைகளும் உண்டு. ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் 8 முதல் 9 முறை அறுவடை செய்யும் கீரை வகைகளும் உண்டு.

உதாரணமாக, சிவப்பு பொன்னாங்கன்னி கீரை ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து அறுவடை செய்யலாம்.

நோய், பூச்சி தாக்குதல் இல்லாமல் பாதுகாப்பது அவசியம். நெல்லுக்கு உரமிடுவதைப் போல கீரைகளையும் சரிவர பராமரிக்க வேண்டும்.

ஆட்டு எரு, மாட்டு சாணம் கீரைகளுக்கு உகந்த உரமாகும்.

குறிப்பிட்ட இடைவெளியில் கீரை செடிகளுக்கு மாட்டு கோமியம் தெளிக்கலாம். மாட்டு சாணத்தை கரைசலாக்கி கடலைமாவு, வெல்லம் கலந்து ஜீவாமிர்தம் கரைசலாக தரலாம்.

வெயில் நேரத்தில் பாலக்கீரை விதையை ஒருமுறை விதைத்தால் 20 முறையும், மழைக்காலத்தில் கூடுதலாக 4 முறையும் அறுவடை செய்யலாம்.

பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை வகைகளை 12 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்தால் அடுத்தடுத்து தழைத்து வளரும்.

முழு அறுவடை முடிந்த பின் அதே இடத்தில் அதே வகை கீரைகளை விதைக்காமல் இடம்மாற்றி விதைக்க வேண்டும்.