இன்று சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்

ஒரு சமூகத்தில் உள்ள பெரும் மக்கள் கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்றங்கள் நடப்பது தவிர்க்க இயலாது.

அவ்வாறு குற்ற செயலில் ஈடுபடுவதால் அதற்கான தண்டனையும் வழங்கப்படுகிறது. இதில் மிகவும் கொடூரமானது மரண தண்டனை.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குறிப்பாக உலகில் மூன்றில் 2 பங்கு நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன.

உலகம் முழுவதும் இதை பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என பலர் விரும்புகின்றனர்.

இதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி அக்.,10ல் உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தண்டனையை வழங்கிக் கொண்டிருக்கும் இன்னும் சில நாடுகளும் இதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.