இன்று சர்வதேச உணவு தினம்!
உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
'சிறந்த உணவு, சிறந்த எதிர்காலத்துக்காக கைகோர்த்து செல்லுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
1945ம் ஆண்டு அக்.16ல் ஐக்கிய நாடுகள்சபைகளின் துணை அமைப்பான உணவு, வேளாண் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நாளில் 1979 முதல் உலக உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்து இதன் நோக்கம்.
இன்றைய நிலையில் உலகஅளவில் 82கோடி பேர் தினமும்பசியால் வாடுகின்றனர். 21 சதவீதம் இந்திய குழந்தைகள் சாரசரி எடையை விட குறைவாக உள்ளனர்.
உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து என்பது மனிதன் நோய் நொடியின்றி உயிர்வாழ வழி வகுக்கிறது.
உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து சேர வேண்டும்
பட்டினி இல்லா சமுதாயம் உருவாக்குவோம் உணவை வீணாக்காமல் சேவை செய்வோம்.