இன்று உலக வாழ்விட தினம்
அனைவருக்கும் பாதுகாப்பான தங்குமிடம் வேண்டி ஐ.நா., சார்பில் அக். முதல் திங்கள் (அக். 6) உலக வாழ்விட தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நகரங்கள் மற்றும் நகரங்களின் நிலை மற்றும் போதுமான தங்குமிடம் அனைவருக்கும் அடிப்படை உரிமையைப் பிரதிபலிக்கும்.
போர், பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற சூழல்களினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடுகிறது.
உலகில் 12.2 கோடி பேர் வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
அதிகரிக்கும் நகரமயமாக்கலும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
உள்நாட்டில் இடம் பெயர்வோர், அகதிகளில் 60% பேர் நகரங்களுக்கு புலம் பெயர்வதால், உள்ளூர் மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
'நகர்ப்புற நெருக்கடிக்கான பதில்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.