இன்று இந்திய இளைஞர் எழுச்சி தினம்
'மக்கள் ஜனாதிபதி' அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்.15, இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. அவரின் பொன்மொழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது.
தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.
அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக்கொள்ளுங்கள்.
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதி காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.