யுனெஸ்கோ பட்டியலில் உலகளவில் பார்க்க வேண்டிய 6 குகைகள்
மாமத் குகை தேசிய பூங்கா, அமெரிக்கா... இது உலகின் மிக நீளமான அறியப்பட்ட குகை அமைப்பாகும்; 643 கி.மீ.க்கும் அதிகமான ஆய்வு செய்யப்பட்ட பாதைகள் உள்ளன.
எலிஃபண்டா குகைகள், இந்தியா... மும்பையில் கட்டாயமாக பார்க்க வேண்டிய இடமிது. பண்டைய இந்து, புத்த சிற்பங்களைக் கொண்ட பாறையில் வெட்டப்பட்ட அமைப்பாகும்.
அஜந்தா குகைகள், இந்தியா... கிமு., 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால புத்த குகைக் கோவில்களின் தாயகமாகும். சிக்கலான ஓவியங்கள், சிற்பங்களால் நிறைந்துள்ளன.
எல்லோரா குகைகள், இந்தியா... இங்குள்ள ஒற்றைக்கல் கைலாச கோயில் மிகவும் பிரபலமானதாகும். இங்கு சிக்கலான சிற்பங்கள் மற்றும் கட்டடக்கலை வியக்க வைக்கும்.
குனுங் முலு தேசிய பூங்கா, மலேசியா... உலகின் பிரபலமான மற்றும் வினோதமான குகை அமைப்புகளில் ஒன்று இது. மிகப்பெரிய குகை அறைகள், பாதைகள் உள்ளன.
போங் ந-கே பேங் தேசிய பூங்கா, வியட்நாம்... இங்குள்ள பிரம்மாண்டமான அறைகள், நிலத்தடி ஆறுகள் கொண்ட பிற குகைகள் மெய்சிலிர்க்க வைக்கும்.