பெண்களை என்றும் கவரும் ஓணம் பேஷன்!

ஓணம் அன்று அணியப்படும் பாரம்பரிய மற்றும் நவீன பேஷன் உடைகள், லேடஸ்ட் ஸ்டைலிங் குறித்து பார்ப்போமா..

ஓணம் பண்டிகைக்கு கேரளாவின் பாரம்பரியமான வெள்ளை நிறத்தில் தங்கம் ஜரிகை கரை வைத்த கசவு புடவைகள் எப்போதும் முதலிடத்தில் உள்ளது.

மரகத பச்சை, சிவப்பு, நீலம், மற்றும் மஜந்தா போன்ற கான்ட்ராஸ்ட் நிற பிளவுஸ்கள் கசவு புடவைக்கு புதிய தோற்றத்தை அளிக்கின்றன.

தற்போது தங்க நிற பார்டருடன் கிருஷ்ணர் ஓவியங்கள், கதகளி முகங்கள், அல்லது பூக்கள் போன்ற கலம்காரி மற்றும் எம்பிராய்டரி டிசைன்கள் சேர்க்கப்படுகின்றன.

செட் முண்டு எனப்படும் இரண்டு பகுதி ஆடைகளும் பாரம்பரிய தோற்றத்தைத் தரும் .

மாங்காய் மாலை மற்றும் ஆன்டிக் தங்கம் ஓணம் உடைகளுக்கு அழகு சேர்க்கும்.

இந்தாண்டு ஓணம் கொண்டாட்டத்தில் ஓல்டு டிசைன் நகைகள், பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

கதகளி உருவம் கொண்ட சிவப்பு, பச்சை கற்கள் பதித்த பெரிய நகைகள் அதிகம் விரும்பப்படுகின்றன.

ஓணம் சேலையுடன் இவற்றை அணியும் போது அதிக அலங்காரம் இல்லாமலேயே அழகிய தோற்றம் கிடைக்கிறது.

இந்த நகைகளை கல்லூரி, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறும் போது, பெண்கள் விரும்பி அணிந்து ஓணம் வந்நல்லா என்று மகிழ்கின்றனர்.