இன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் உலக நோயாளி பாதுகாப்பு தினம் செப். 17ல் கடைபிடிக்கப்படுகிறது
2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற 72-வது உலக சுகாதார சபைக் கூட்டத்தில் , உலக சுகாதார நிறுவனம் (WHO) சார்பில் இத்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உடல் நலத்தை பாதுகாப்பதில் மருத்துவதுறை முக்கியபங்கு வகிக்கிறது.
மருத்துவத்தில் நோயாளியின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க இத்தினம் வலியுறுத்துகிறது.
பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை உலகில் சுகாதாரத்தில் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது.
இத்தினம் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையிலும் நீண்டகால மேலாண்மையிலும் பாதுகாப்பான பராமரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
'தொற்றா நோய்களுக்கான பாதுகாப்பான பராமரிப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.