சிப்பி காளான் வளர்ப்புக்கு நல்ல காற்றோட்டம் இருக்கணும்...!

சிப்பி காளான் வளர்ப்பில் பலரும் தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.

சிப்பி காளான் வளர்ப்புக்கு நல்ல காற்றோட்டம், ஈரப்பதம் மிகுந்த கொட்டகை இருக்க வேண்டும். அப்போதுதான், காளானில் அதிக மகசூல் ஈட்ட முடியும்.

இதை வளர்க்கும் போது, நல்ல காற்றோட்டம் கிடைக்காமல் இருந்தால், மொட்டுகள் வளர்ச்சி பெற்று, விரிவு பெறாமல் நின்று விடுகின்றன.

மேலும், காளான் வெள்ளை நிறத்தில் இல்லாமல், வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதை தவிர்க்க, காளான் மலரும் அறைக்கு நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், 12 மணி நேரம் வரையில் வெளிச்சம் இருக்க வேண்டும்.

காளான்கள் மீது நீர் துளிகள் தேங்காதவாறு பாதுகாக்க வேண்டும்.

இந்த குறைபாடுகளை சரி செய்யும் போது, சிப்பி காளானில் அதிக வருவாய் ஈட்ட முடியும்.