புத்தம் புது பூமி காப்போம் - இன்று உலக பூமி தினம்!

சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ல் சர்வதேச பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டுறது.

கடந்த 1970, ஏப்., 22ம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி, லட்சக்கணக்கான மக்கள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் போராட்டம் நடத்தினர்.

எல்லைகளைக் கடந்து இத்தினமே, உலக பூமி தினமாக உருவெடுத்தது.

பூவி மற்றும் பிளாஸ்டிக் என்பது இந்தாண்டு மையக்கருத்து.

2040க்குள் அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தியிலும் 60 சதவீதம் குறைப்பை இலக்காகவும் கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த ஆண்டின் நோக்கமாகும்.

அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் பூமிக்குள் நிலத்தடி நீர் ஊடுருவிச் செல்லாமல் மேற்பரப்பில் தங்கி ஆவியாகிறது.

பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டுமெனில் தனிமனிதர், அரசு, அமைப்பு என அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத்தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.