இன்று கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்!
மனதில் உறுதி வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அஞ்சுவது கூடாது. பிறர் நம்மைத் தாழ்வாக நடத்த இடம் தரவும் கூடாது.
மனிதனுக்குச் சிறந்த நண்பனாகவும், கொடிய பகைவனாகவும் இருப்பது அவனுடைய மனமே.
கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிருங்கள்.
தன்னைத் தானே திருத்திக் கொள்ள முடியாதவன் பிறரைத் திருத்தும் அதிகாரத்தை இழந்து விடுகிறான்.
வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.
நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை. தினமும் ஒரு அனுபவம் மனித வாழ்வில் உண்டாகிறது.
ஜீவகாருண்யமே எல்லா தர்மங்களிலும் மேலானது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.