சமையலறையில் பிளாஸ்டிக் துகள்... ஆய்வில் தகவல்!

நாம் பயன்படுத்தி துாக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாத்திரம் கழுவ பயன்படும் பஞ்சுகள், பிளாஸ்டிக் நுண் துகள்களின் ஆதாரமாக உள்ளது என ஜெர்மனியின் பான் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தினசரி பயன்பாட்டில் பஞ்சு தேய்வதால், அதிலிருந்து பிளாஸ்டிக் நுண்துகள்கள் வெளியேறுகின்றன.

ஒரு வீட்டில், ஆண்டுக்கு தோராயமாக 0.68 கிராம் முதல் 4.21 கிராம் (பஞ்சுகளை பொறுத்து) பிளாஸ்டிக் நுண் துகள் வெளியிடப்படுகிறது.

உலகில் 2 லட்சம் முதல் 10 லட்சம் கிலோ, நுண்துகள் வெளியாகிறது என ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நீர் மற்றும் மண்ணில் கலந்து, சுற்றுச்சூழல் மாசுவை மேலும் மோசமாக்குகின்றன.

கடற்பஞ்சு போன்ற சாதாரண பொருள் கூட தினசரி வாழ்வில் சுற்றுச்சூழலை பாதிப்பது குறித்து நமக்கு விழிப்புணர்வு தேவை என்பதை இந்தாய்வு கூறுகிறது.

மனிதர்களின் ரத்தம், நுரையீரல் மற்றும் சிசுக்களின் நஞ்சுக்கொடி வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்து பெரும் சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமையலறையிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதால் ஆரோக்கியம் பலத்த கேள்விக்குறியாகிறது.