டிஜிட்டல் டிமென்சியா: தொழில்நுட்பத்தால் குறையும் நினைவாற்றல்

இன்று எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்துக்கொள்வது வழக்கமாகி விட்டது.

சின்ன, சின்ன விஷயங்களுக்கும் கூகுளை நம்பி, சொந்த நினைவகத்தை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்கிறோம்.

இதனால், நினைவாற்றல், கவனம், சிந்திக்கும் திறன் போன்ற மூளையின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கிறது. இந்த நிலையே 'டிஜிட்டல் டிமென்சியா' எனும் மறதிநோய்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை 'கேட்ஜெட் ப்ரீ' நேரமாக ஒதுக்க வேண்டும்.

கூடுமானவரை, முக்கிய விஷயங்களை நினைவில் வைக்க முயற்சிக்க வேண்டும்.

தேவைப்பட்டால், நோட்டிலும் குறிப்பெடுத்து வைக்கலாம். எழுதும் போது இன்னும் மனதில் ஆழமாக பதியும்.

சிறிய விஷயங்களுக்கெல்லாம் உடனே கூகுளை தேடாமல், சுய சிந்தனைக்கும் நேரம்கொடுங்கள்.

மூளைக்கு வேலை கொடுக்கும், குறுக்கெழுத்து, கிராஸ்வேர்ட், பசுல் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.

குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை உறுதி செய்ய, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்கிரீன் டைம் குறைவாகவோ அல்லது அறவே இல்லாமலோ வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளிடம் அதிகரிக்கும் ஸ்கிரீன் பயன்பாடு, கவனச்சிதறல், பேசுவதில் தாமதம், மறதி மற்றும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வெகுவாக பாதிக்கிறது

மூளை மற்றும் உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும்.