மழைக்காலங்களில் தோல் வறண்டு போக காரணம் என்ன?

மழைக் காலங்களில் எண்ணெய் சுரப்பியின் அளவு குறையும்போது தோலில் அரிப்பு, வெடிப்பு, அலர்ஜி ஏற்படும்.

தோல் பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைக்க எண்ணெய் சுரப்பி உதவுகிறது. இதற்காக மருந்து உட்கொள்ள வேண்டியதில்லை.

தோல் வறண்டு போவதைத் தடுக்க சாதாரண தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்க்க வேண்டும்.

இது தோலில் வழக்கமாக இருக்க வேண்டிய எண்ணெய் சுரபியின் அளவை சமன்படுத்தி பாதுகாக்கும். மேலும் இதை செய்தால் தோல் வறண்டு போகாது.

ஆடை அணியும்போது வெளியில் தெரியும் உடல் பாகங்களில் மட்டும் இது போன்ற பிரச்னை ஏற்படும். அதனால் கை, கால்கள் முழுவதும் மூடும் வகையில் ஆடைகளை அணிவது நல்லது.

உணவில் உலர் பழங்கள், ஆலிவ் ஆயில், தேங்காய், நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

மழைக்காலம் முடியும் வரை வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவேண்டும்.

தினமும் இரவில் சீரகத் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்னைகள் சீராவதுடன் தோல் பளபளக்கும்.

ஆஸ்துமா, சைனஸ் பிரச்னைகள் உள்ளவர்கள் நீர்க்காய்கறிகளை சேர்ப்பதை தவிர்த்து அதிக நார்ச்சத்து உடைய காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்.

சோப்பு போட்டு குளிப்பதை தவிர்க்கலாம். இவைகளை தொடர்ந்து கடை பிடித்தால் தோல் வறண்டு போகாமல் உடல் ஆரோக்கியமும் சீராகும்.