அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்க ?
உடல் நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சரவர உட்காராமல் இருக்கும்போது, நாளடைவில் எலும்பு, மூட்டு, தசைகள், தசைநார்கள் பாதிப்படையக்கூடும்.
தற்போது சிறு குழந்தைகள் கூட கழுத்து வலி என கூறுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, வீட்டில், அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே பணிபுரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரின் முன் அதிக நேரம் அமர்ந்துக் கொண்டே வேலை செய்யும்போது, 15 - 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 விநாடிகள் எழுந்து நடக்க வேண்டும்.
நாள் முழுவதும் இடைவிடாமல் கம்ப்யூட்டர் முன்பு உட்காராமல், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு முறை பிரேக் எடுத்து ஒரு சில நிமிடங்கள் நடக்க வேண்டும்.
நீங்கள் உட்காரும் நாற்காலி மற்றும் டேபிள் உயரம் சரியாக இருக்க வேண்டும். முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து தான் எப்போதும் உட்கார வேண்டும்.
கை மூட்டு உடலுக்கு அருகில் வைத்திருக்க வேண்டும் அதாவது 90 - 120 டிகிரிக்குள் இருக்க வேண்டும். கண்களுக்கு நேராக தான் லேப்டாப் இருக்க வேண்டும்.
கண்களை கீழ் அல்லது மேல் நோக்கியபடி லேப்டாப் ஸ்க்ரீன் இருக்கக்கூடாது. புத்தகம் படிக்கும்போதும் கண்களுக்கு நேராக தான் இருக்க வேண்டும். இதேப்போல் உட்காருவதும் கூட முக்கியமானது.
எலும்பு மற்றும் தசைநார்கள் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதால், கால் மேல் கால் போட்டு அதிக நேரம் உட்காராமல் முடிந்தளவு தொடைகள் மற்றும் கால்களை நேராக வைத்து உட்காருங்கள்.
அதிக நேரம் உட்காரும்போது உங்கள் மூட்டு, தொடை 90 டிகிரியில் இருக்கட்டும். அதேப்போல், உட்கார்ந்த நிலையிலேயே கழுத்து, கைகளுக்கு எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி மேற்கொள்ளலாம்.