பணிப்பெண், டிரைவர் நியமனத்தில் கவனம் : பொதுமக்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்

வேலைக்கு வருபவரின் அடையாள அட்டை, முகவரி போன்ற விவரங்களை தயங்காமல் கேட்டு பெற வேண்டும் என போலீசார் கூறுகின்றனர்.

அவர்கள் பேசும் மொழி புரியவில்லை என்றால், அந்த மொழி தெரிந்த யாரையாவது உதவிக்கு அழைத்து விசாரிக்கலாம்.

முன்பு வேலை செய்த இடம் பற்றி கேட்டு, அந்த முதலாளிகளிடம் விசாரிப்பது அவசியம்

யாரையும் தெரியாது என்றால், வரும் நபரிடம் விவரங்களை மட்டும் வாங்கி, போலீஸ் மூலமாகவே அது உண்மைதானா என உறுதி செய்யலாம்.

போலீசார் அந்த நபரின் பெயர், முகவரியை கம்ப்யூட்டரில் ஏற்றி, வழக்குகளில் சம்பந்தப்பட்டவரா என்பதை கண்டுபிடித்து சொல்ல முடியும்.

இதற்காக நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய தேவையில்லை. ஆன்லைனில் இந்த சேவையை பெறலாம்.

நல்லவராக இருந்தாலும் புது நபர் முன்னால் சொந்த விஷயங்களை, குறிப்பாக பணம், நகை, சொத்து பற்றி பேச வேண்டாம்.

வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். வாசல், சாலையை சேர்த்து கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்துவது நல்லது.

வீடு தேடி வந்து இலவச பரிசு அல்லது சர்வே என்ற பெயரில் யாராவது உங்களை பற்றி தகவல் கேட்டால் சொல்ல வேண்டாம்.