மூலநோயைக் குணப்படுத்தும் கசகசா

கசகசா, ஜாதிக்காய் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேன் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பாகுபோல் காய்ச்சி, 5 கிராம் அளவிற்குத் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு கட்டுக்குள் வரும்.

பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதையுடன் கசகசாவை சம அளவு எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து பளபளப்பாக மாறும்.

கசகசாவைத் தேங்காய் துவையலுடன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வர, நாளடைவில் வயிற்றுப்போக்கு குணமாக வாய்ப்புள்ளது.

கசகசாவை தூளாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.

கசகசாவைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் தொடர்பான பிரச்னையை தீர்க்கலாம்.

கசகசாவுடன் வால்மிளகு, கற்கண்டு, வாதுமை பருப்பை சம அளவு எடுத்து நெய் அல்லது தேன் கலந்து தினமும் காலை, மாலை இருவேளையும் 5கிராம் அளவிற்குச் சாப்பிட, நாளடைவில் மூலம் கட்டுக்குள் வரும்.