கண் புரை அறுவை சிகிச்சை பின்னான கண் பராமரிப்பு

கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் கண்களை பராமரிப்பது அவசியம். குறைந்தது 45 நாட்களுக்கு டாக்டர் பரிந்துரைத்த மருந்தை கண்களுக்கு செலுத்த வேண்டும்.

ஒரு கண் மட்டும் அறுவை சிகிச்சை செய்தால் மற்றொருக்கு கண்ணை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்.

சில நாட்களில் அந்த கண்ணிலும் புரை ஏற்படலாம். வயது, உடல்நிலை பொறுத்து இவை மாறுபடும்.

அறுவை சிகிச்சையின் போது இயற்கை லென்ஸ்சை அகற்றி செயற்கை லென்ஸ் பொருத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

சிலருக்கு கிட்டப்பார்வை குறைந்து பார்வை மங்கலாக தெரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.

கண்கள் உலர்ந்து காணப்பட்டால் அதற்கான சொட்டு மருந்து கண்களுக்கு விட வேண்டும்.

செயற்கை லென்ஸ் பின்னால் உள்ள உறை சில நாட்களுக்கு பின் மங்குவதால் இரண்டாம் நிலை கண்புரை ஏற்படும்.

இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. லேசர் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.