கர்ப்ப கால கவனிப்பு... இதோ சில டிப்ஸ்

கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றிலுள்ள குழந்தை கறுப்பாகவும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகவும் பிறக்கும் என்பது மூட நம்பிக்கையே.

தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனும் நிறமிகளே.

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பின் பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்குமென சிலர் பயப்படுவர்; அது தேவையற்றது.

கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது.

அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வாழைப்பழம் தரும். உடல் காரணங்களால் மட்டுமல்ல. உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை இது நீக்கும்.

கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால் தான் இப்படி என்று சொல்வது தவறு.

கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

தைராய்டு, நீரிழிவால் பாதிக்கப்பட்ட பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது. குழந்தையைப் பாதிக்காது.