என்னாச்சு? என்னாச்சு? எக்கோலாலியாவா இருக்குமோ... அப்படினா?

எக்கோலாலியா (Echolalia) என்பது, சொல்வதைச் சொல்லும் பழக்கம் உள்ள ஒரு சிறிய குறைபாடு போன்றது. இது மனம் சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

சிலர் பேச்சுக்கு இடையே ஒரு வார்த்தையை அவர்களை அறியாமல் மீண்டும் மீண்டும் உச்சரிப்பர். இதுவும் எக்கோலாலியா தான்.

ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட மனக் குறைபாடு உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே இந்த பிரச்னை அதிகமாகக் காணப்படுவதாக கூறப்படுகிறது.

மனநலம் குன்றியவர்களுக்கு மட்டும அல்லாமல் நடுத்தர வயது இளைஞர்கள் சிலருக்கும் இந்த பிரச்னை ஏற்படலாம். அதீத மனஅழுத்தம், பயம், பதற்றம் காரணமாக சிலருக்கு இது ஏற்படும்.

மேலும் தலையில் எதிர்பாரா விபத்தால் அடிபட்ட சிலருக்கு தற்காலிகமாக இப்பிரச்னை ஏற்படலாம். (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விஜய் சேதுபதிபோல..!).

டிமென்ஷியா உள்ளிட்ட மூளை பாதிப்பு கொண்ட முதியோர்களுக்கும் எக்கோலாலியா ஏற்பட வாய்ப்புள்ளது.

எக்கோலாலியா இவ்வாறாக பல்வேறு வயதினரை பாதிப்பதால் இதற்கு மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதற்கு கவுன்சிலிங், ஸ்பீச் தெரபி என பலவித சிகிச்சைகள் உள்ளன. எனவே எக்கோலாலியா எந்த வயதினரைத் தாக்கினாலும் அவர்கள் நரம்பியல் நிபுணரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது.