வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை வழியாக வெளியேறுவதால், உடல் பலவீனமாக வாய்ப்புண்டு.
அதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும், திரவ உணவு வகைகளான மோர், இளநீர், பழச்சாறு, கஞ்சி போன்றவைகளை அதிகம் குடிக்க வேண்டும்.
மாதுளை, சாத்துக்குடி, தர்ப்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடலாம்.
முக்கியமாக, குழந்தையின் வளர்ச்சியின்போது, கர்ப்பிணிகள் உடம்பில் நீர்ச்சத்து இருந்தால் தான் குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும்.
மேலும் குழந்தையின் உடலில் ரத்த ஓட்டமும் சராசரியாக இருக்கும்.
குளிர்பானங்களை குடிப்பது உடல்நலத்திற்கு கேடு. அதில் ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஐஸ் கிரீம், சிப்ஸ் அயிட்டங்கள், வறுத்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.