குழந்தைகளுக்கு டீ, காபி தருவது ஆரோக்கியமானதா?

உலகளவில், 2 வயது குழந்தைகளில், 14 % பேருக்கு, காபி அருந்த கொடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன; 1 வயது குழந்தைகளில் 2.5 % பேர், தாய் உதவியால் காபி குடிக்கின்றனர்.

அமெரிக்க குழந்தைகள் நல அகாடமி, குழந்தைகள், 12 வயது வரை காபியோ, டீயோ அருந்தக்கூடாது என எச்சரிக்கிறது.

குழந்தைகள் காபி, டீ குடிப்பதால் அமைதியின்மை, துாக்கமின்மை, நீர்சத்து குறைபாடு, ரத்தசோகை, செரிமானக் கோளாறு, ஒவ்வாமை, எதுக்களிப்பு, இருதய படபடப்பு, மனநல பாதிப்பு ஏற்படக்கூடும்.

வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் ஒரு நாளில், 400 மில்லி அளவு காபி எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணியரும், தாய்ப்பால் கொடுப்போரும் காபியை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளின் சிறுநீரகமும், ஈரலும் காபியை செரிக்க பல மணி நேரம் எடுத்துக் கொள்வதாக, மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, 12 வயது முதல், 18 வயதுக்கு உட்பட்டோர் தினமும், 100 மில்லி காபி எடுத்துக் கொள்ளலாம். அது பாதிப்பை ஏற்படுத்தாது.

காபி, டீக்கு பதிலாக பால், மூலிகை டீ, எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீர், இனிப்பு கலவாத பழச்சாறு என எதாவது ஒன்றை காபி மக்கில் குழந்தைகளுக்கு தரலாம்.