பயந்தும் ஹாரர் படம் பார்ப்பவர்களா நீங்கள்; பின்னுள்ள காரணங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்..!

கைகள் நடுநடுங்க, உள்ளங்கை வியர்க்க, அப்படியும் த்ரில்லர் படங்களைப் பார்த்து ரசிப்போர் உள்ளனர்.

இதற்கு 'ரீக்ரியேஷன் ஃபியர்'(Recreation fear) என்றுப் பெயர் கூறுகிறார், 'கிளான்சன்'.

நமக்கு ஏன் பயப்படக்கூடிய விஷயங்கள் பிடிக்கின்றன? காரணம், நம் உடம்பில் பயப்படக்கூடிய காட்சிகளைப் பார்க்கும் பொழுது அட்ரினாலின் சுரக்கிறது.

இதற்குப் பின் மூன்று உளவியல் காரணங்கள் உள்ளன.

முதலில் நாம் காட்சி வழியாகவே அதனைப் பார்க்கின்றோம், மற்றபடி நாம் அதற்குள் நெருங்குவதில்லை என்று நமக்குத் தெரிவது.

இரண்டாவது திரையில் தெரியும் அந்தப் படத்தில் வரும் நடிகர்களின் நடிப்பை மட்டும் ரசிப்பது; அது படம் என்று நம்புவது.

மூன்றாவது நம் மனநிலையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு அந்தப் படத்திற்குள் மூழ்கி விடாமல் இருப்பது.

இந்த மூன்று உளவியல் தயார் நிலைகள் இல்லாதவர்கள் ஹாரர் கதைகள், புத்தகங்கள், படங்கள் போன்ற எதனையும் விரும்ப மாட்டார்கள்.

ஒரு குழுவாக சேர்ந்து பார்க்கும் பொழுது நம் உற்றார் உறவினர்கள்களுக்கு நடுவே நமக்கும் உள்ள நெருக்கம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.