ஆடுகளம் படத்தை பெருமைப்படுத்திய ராஜமவுலி
பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவிலும் வரவேற்பு பெற்ற, மதிக்கப்படுகின்ற இயக்குனராக மாறியுள்ளார் ராஜமவுலி.
கடந்தாண்டில் இவரது இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகளவில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தில் மரகதமணி இசையில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல், சமீபத்தில் 'கோல்டன் குலோப் விருது' பெற்றதுடன், ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் நாமினேசன் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இயக்குனர் ராஜமவுலியிடம், 'இந்திய மொழிகளில் வெளியான, கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து படங்களை பட்டியலிடுங்கள்' என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜமவுலி, 'சங்கராபரணம், முன்னாபாய் எம்பிபிஎஸ், பண்டிட் குயீன், பிளாக் பிரைடே மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம்' என ஐந்து படங்களை குறிப்பிட்டார்.
மேலும், 'ராஜமவுலி என்று அழைக்கப்படுகின்ற ஒருவரால் இயக்கப்பட்ட 'ஈகா' என்ற படத்தையும் மறந்துவிட வேண்டாம்' என, அவர் தன்னுடைய படம் குறித்தும் கலாட்டாவாக குறிப்பிட்டார்.
'இந்திய சினிமாவே போற்றி புகழ்கின்ற ஒரு மாபெரும் இயக்குனர், படத்தை பற்றி
பாராட்டி எங்களை மிகவும் பெருமைப்படுத்தி விட்டார்' என, ஆடுகளம்
படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.