ராஜஸ்தான் ஸ்பெஷல் மால்புவா ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: பால், மைதா மாவு - தலா 1 கப், சோம்பு - 3 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப்.
நெய், தண்ணீர் - தலா - 1 கப், பாதாம், ஏலக்காய் - தேவையானளவு, பாலாடை கட்டி (கோயா) - 0.25 கப்.
ஒரு பாத்திரத்தில் கோயா மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கி, மைதா, சோம்பு சேர்த்து, மாவு பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்.
உங்களுக்கு மால்புவா எப்படி வேண்டுமோ (மெல்லியதாக அல்லது தடியாக) அதற்கேற்ப மாவு கலவை தயாரிக்கவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், சர்க்கரை சேர்த்து 6 - 7 நிமிடங்கள் கிளறவும். அதில், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து, பாகு பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
வேறொரு கடாயில் நெய் சேர்த்து சூடானவுடன், மாவு கலவையை கொஞ்சமாக ஊற்றவும். இது தீயாமலிருக்க குறைந்த தணலில் அடுப்பை வைக்கவும்.
இரு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேக விட்டு, பின் சர்க்கரை பாகில் நனைத்தெடுத்தால், ராஜஸ்தான் ஸ்பெஷல் மால்புவா இப்போது ரெடி.
இனிப்பு சுவையை விரும்புபவர்கள் சர்க்கரை பாகில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். சிறிதளவு ஏலக்காய், துருவிய பாதாம் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.